திருகோணமலையில் தொடரும் அவலம்- மக்கள் அசௌகரியம்

திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஜின்னாநகர் கிராமத்திலுள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளமையால் பொதுமக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

சமையலறை ,வீட்டுத்தளபாடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

ஒவ்வொரு முறையும் மழை காலத்தில் ஜின்னா நகர் பகுதி வெள்ளத்தில் மூழ்குவதாகவும் இது விடயமாக அரசியல்வாதிகளிடமும் ,அதிகாரிகளிடமும் பல தடவைகள் முறையிட்டும் வடிகாண் வசதிகளை செய்துதருமாறு கோரிக்கை விடுத்தும் அவர்கள் இதுவரை கவனத்தில் கொள்வதில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.

அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் வாக்குறுதிகளை வழங்கி தம்மை ஏமாற்றுவதாகவும் தோப்பூர் – ஜின்னா நகர் கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

Leave a Reply