
உள்ளூராட்சி மன்றதேர்தலை கலப்பு தேர்தல் முறைமையில் நடத்துவது குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.
இதன்படி 60சதவீத பிரதிநிதிகளை விகிதாசார தேர்தல் முறைமையின் அடிப்படையிலும், 40 சதவீத பிரதிநிதிகளை தொகுதிவாரி தேர்தல் முறைமையின் அடிப்படையிலும்தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தேர்தல் சட்டத்தை மறுசீரமைத்தல் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில,சகல அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் சட்டம் மறுசீரமைப்பு தொடர்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவு குழு கூடியபோதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.





