இலங்கை கடற்பரப்பில் 12 தமிழக மீனவர்கள் கைது

மன்னார், பெப் 13: இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த, 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில் “கிளிநொச்சி, இரணை தீவுக்கு அருகில் இலங்கை கடற்பரப்பில் அது மீறி மீன்பிடித்த 2 படகுகளில் இருந்த 12 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

இவர்கள் நாச்சிக்குடா கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்று தெரிவித்தார்.

Leave a Reply