
கண்டி கல்னேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அவுக்கன பிரதேசத்தில், புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவரை கல்னேவ பொலிஸார், நேற்று (12) கைதுசெய்துள்ளனர்.
இதன்போது புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அவுக்கன, பெம்முல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 44, 43, 36 வயதுகளையுடைய மூவவே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





