கடல் தொழிலாளர்களுக்கு ஒளிமயமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதே எனது நோக்கம் என கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்று இடம்பெற்ற கடல்தொழிலார்களுடான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடல் தொழில் அமைச்சராக நான் பதவியேற்க முன்பாகவே மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கரிசனையுடன் செயற்பட்டு வந்தேன்.
மீனவர்களின் பிரச்சினை தீர்ப்பதே எனது நோக்கம்.நானும் ஆயுதம் ஏந்தி போராடியவன் தான்.
பின்னர் ஜனநாயக ரீதியில் தீர்வை பெறுவதே சிறந்தது என நினைத்து அதன் வழியில் செல்கிறேன்.
ஆரம்பத்தில் ஆயுத போராட்டத்திக்கு வழிவகுத்தவன் நான்.
90 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நான் நாட்டை விட்டு ஓடி இருக்கலாம். ஆனால் இங்கு மக்கள் படும் துன்பத்தை கருத்தில் கொண்டு இங்கே இருந்தேன்.
மீனவர்களின் வாழ்வில் ஒளிமயமாக்குவது தான் என்னுடைய ஒரே நோக்கம் என்றார்.





