யுத்தம் போன்று சுகாதார ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பை சிலர் காண்பிக்கின்றனர்- ருக்ஷான் பெல்லன் ஆவேசம்

சுகாதார ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பை பெரிய யுத்தம்போன்று மக்களுக்கு சிலர் காண்பித்து வருகின்றார்கள் என தேசிய இரத்தமாற்று சேவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த போராட்டம் நிகழ்ந்தாலும் கூட இதுவரைக்கும் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு பாரியளவிலாள பாதிப்பை ஏற்படுத்துவதற்கு இடமளிக்கவில்லை.

மேலும், நோயாளர்களை பராமரிப்பது தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எங்களுக்கு தெரியும்.

இந்த பணிப்பகிஸ்கரிப்பினை முன்னெடுப்பவர்கள் சுகாதார தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள். இவர்கள்தான் இதுவரைக்காலமும் இந்த நோயாளர்களை பாதுகாத்து கொண்டு இருப்பவர்கள்.

ஆனாலும் இதுகால வரைக்கும் டயானா கமகேயோ, திஸ்ஸ குட்டாராச்சி ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களோ அவர்களை கவனிக்கவில்லை. இந்த தொழிற்சங்க உறுப்பினர்கள்தான் கவனித்து இருக்கின்றார்கள்.

இருப்பினும் இதனை ஊடகங்கள் மோசமான விடயம் போன்று காண்பித்து வருகின்றது.

மேலும் 3 மாதங்களுக்கு முன்னரும் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள், சுகாதார திணைக்கள செயலாளரிடம் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை
இப்போது சுகாதார சேவையைச் சேர்ந்த செயலாளர் போன்றோர் இந்த பணிப்பகிஸ்கரிப்பினை நிறுத்துவதில் மும்முரமாக ஈடுபடுவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது”என அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply