எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்-அவுஸ்திரேலிய சட்ட வல்லுநர்கள் குழு இலங்கைக்கு முக்கிய அறிவிப்பு

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலின் தீப்பரவல் காரணமாக ஏற்ப்பட்டசுற்றுச்சூழல் பாதிப்பை துல்லியமாக கணக்கிடுவதற்கு 3 வருடங்களாவது தேவைப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தினை அவுஸ்திரேலிய சட்ட வல்லுநர்கள் குழுவொன்று தெரிவித்ததாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில், மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அவுஸ்திரேலிய சட்ட வல்லுநர் குழுவுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே நேற்று (சனிக்கிழமை), சுற்றுச்சூழல் பாதிப்பை மதிப்பீடு செய்த நிபுணர் குழுவுடன் நடைப்பெற்ற இணையவழி சந்திப்பில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய சட்ட வல்லுநர் குழு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply