சுகாதார ஊழியர்களின் சேவையை மறந்தது அரசாங்கம்! – நளின் பண்டார

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாத்த சுகாதார ஊழியர்களின் நியாயமான கோரிக்கைக்கு உரிய நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியாளர் சந்திப்பில் நளின் பண்டார மேலும் கூறியுள்ளதாவது, “இந்த அரசாங்கம் ஆடசிபீடம் ஏறி 2 வருடங்கள் கடந்துள்ள நிலையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்தது.

இந்த காலக்கட்டத்தில் சுகாதார ஊழியர்கள் மீது இருந்த மரியாதை. அவர்கள் மீது அதிக இரக்கம் இருந்தது.

கொரோனா அச்சுறுத்தலான காலக்கட்டங்களில் தங்களது வாழ்க்கை பற்றி சிந்திக்காமல் சிறந்த சேவையை இந்த சுகாதார ஊழியர்களே வழங்கினர்.

மேலும்,இவர்கள் தங்களது சேவையை நிறைவு செய்துவிட்டு அவர்களது வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருடனே இருந்தர். அவர்களது குடும்பத்தினையோ பிள்ளைகளையே பெரிதாக எண்ணவில்லை.

அதுமாத்திரமின்றி இவர்கள் விடுமுறையோ காலத்தையோ கவனத்தினையோ, வருமானத்தையோ கருத்தில் கொள்ளாத நாட்டின் நலனையே சிந்தித்ததுடன் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்பில் செயற்பட்டனர்.

ஆனால் தற்போது அரசாங்கத்துக்கு, அவர்கள் வழங்கிய சேவையை மறந்துவிட்டது என்றே தோன்றுகின்றது.

இதேவேளை மக்களையே பாரிய இன்னலில் இருந்து பாதுகாத்த சுகாதார ஊழியர்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்”

Leave a Reply