
எமது நாடு அபிவிருத்தியடைய வேண்டும் என நாம் நினைத்தால், அதற்கான முதலாவது குறைந்தபட்ச நிபந்தனை, முடிந்தவரை உள்ளுர் உற்பத்திகளை உட்கொள்வதே ஆகும் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உள்ளுர் உற்பத்திகளை உட்கொள்ளுவதன் ஊடாகவே நாட்டில் உருவாக்கப்படும் புதிய உற்பத்திகளை பாதுகாத்து ஊக்குவிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாணத்துறை பகுதியில் நடைப்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விமல் வீரவன்ச இதனைக் கூறியுள்ளார்.
குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் தயாரிப்புகளை மதிக்கின்றன.
மேலும் வளர்ச்சியடைந்த நாடுகள், தங்கள் சொந்த தயாரிப்புகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நுகர்வதில் ஆர்வம் காட்டுகின்றன.
இதேவேளை சொந்த நாட்டை தூற்றி, வெளிநாட்டில் இருந்து வருவதை ஏற்றுக்கொள்ளும் கோழைத்தனமான சமூகங்களைக் கொண்ட நாடுகள் அபிவிருத்தியடையவில்லை.
ஆகவே இன்றைக்கு நம் நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்தால், அதற்கு குறைந்தபட்ச நிபந்தனை, முடிந்தவரை நம் நாட்டுப் பொருட்களை உட்கொள்ளப் பழகிக் கொள்வதுதான்.
ஆகவே, நம் நாட்டுப் பொருட்களை நுகர்வதற்குப் பழகி, அவற்றுக்கு முன்னுரிமை வழங்கி, அதற்கு உரிய இடத்தை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.





