பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு விசேட நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை!

எதிர்வரும் புத்தாண்டு காலத்திலிருந்து நுகர்வோருக்கு ஒரு கிலோ சம்பா அரிசி 125 ரூபாவிற்கு வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

காலி, உனவடுனவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு விசேட நிவாரணங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply