12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்பில் கடற்றொழில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில், நேற்றிரவு 2 படகுகளுடன் குறித்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் கொரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த 12 மீனவர்களும் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, இந்திய மீனவர்கள் 12 பேரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகள் காரணமாக கடற்றொழிலில் ஈடுப்படுவதற்கு மீனவர்கள் மத்தியில் அச்சநிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழகம் இராமேஸ்வரம் மீனவர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply