மக்களை தூண்டி விட்டு பங்கருக்குள் ஒழியும் ஆள் நான் இல்லை! – டக்ளஸ்

யாழ் மாவட்டத்தில் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்த்தின், அறிவுறுத்தல்களை மீறி செயற்படும் கடற்தொழில் சங்கங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற மீனவ சங்கங்களுடான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மீனவ சங்கங்கள் தினைக்களத்தின் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். மீறி செயற்பட்டால், அவற்றின் உரிமம் இரத்துச் செய்யப்படும்.

மீனவ சங்கங்களுக்கு உட்பட்ட கடல் பகுதியில், எவற்றை தடை செய்ய வேண்டும் என எழுத்து மூலமாக தர வேண்டும். என்னோடு சேர்ந்து பயணியுங்கள், உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பேனே தவிர அதை வைத்து அரசியல் செய்ய மாட்டேன்.

அன்று நான் சொன்னதை கேட்டிருந்தால், துன்பங்கள், இடப்பெயர்வுகள் வந்திருக்காது. அன்று நான் சொன்னதை தான், இப்போது தமிழ் கட்சிகள் கையெழுத்திட்டு மோடிக்கு அனுப்பியுள்ளனர்.

மாகாண சபை முறைமை தான் அரசியல் தீர்வுக்கு முதல் படி. தூண்டி விட்டு பங்கருக்குள் ஒழியும் ஆள் நான் இல்லலை. மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கின்றேன்.- என்றார்.

Leave a Reply