யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றின் மீது கல் வீச்சு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது.
கல்லால் எறிந்த பஸ்ஸை சேதமாக்கிய நபரை அங்கிருந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்து, பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.
இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






