
நோயாளி ஒருவர் இறந்தால் அதன் வேதனை விளங்குவதில்லை. ஆனால் தனது குடும்பத்தில் ஒருவர் இறந்தால் அந்த வேதனையை தம்மால் உணரக்கூடியதாக இருக்கும் என திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இன்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் திஸ்ஸ குட்டியாராச்சி மேலும் கூறியுள்ளதாவது,
“அன்பார்ந்த தாய்மார்களே, மக்களின் செலவு அதிகரிக்கவில்லை. மேலும், அதிகளவானோர் வருமானம் குறைந்து இருக்கின்றது என கூறுகின்றார்களே தவிர செலவு குறைந்துள்ளதா எவரும் கூறவில்லை.
இன்று நோயாளிகளிடமும் மரண படுக்கையில் இருக்கின்ற தாய்மார்களிடமும்தான் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது தேவையினை கேட்டு கொண்டு இருப்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இதேவேளை ஆசிரிகள் பணிப்பகிஸ்கரிப்பினை புறக்கணித்த வேளை அன்று நான் அனைத்து ஆசிரியர்களுக்காகவும் பேசவில்லை. அதனை செயற்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஜோசப் ஸ்டாலினுக்கு எதிராகதான் குரல் கொடுத்தேன்.
அந்தவகையில் நேற்று பதுளையில் நோயாளி ஒருவர் இறந்தார். நாளை தியத்தலாவில் இன்னொரு நாள் ஹப்புத்தளையில் என நோயாளிகள் இறக்கலாம்.
அதாவது தனது மகன் இறந்தால் அல்லது தனது தந்தையோ உறவினர்களோ இறந்தால்தான் அவர்களுக்கு அந்த வேதனை புரியும்.
அயல் வீட்டுக்காரர் இறந்தால் தங்களுக்கு விளங்காது அதேபோன்று கண்டியிலோ கொழும்பிலோ இறப்புகள் நிகழ்ந்தால் தங்களுக்கு விளங்காது. ஆனால் எமது உறவுகளில் ஒருவர் இறந்தால்தான் அதன் வேதனையை எம்மால் உணரக்கூடியதாக இருக்கும்.
அதனால்தான் இவ்வாறான வேதனை நிகழும்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தடியை எடுக்க வேண்டும்” என கூறினேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.





