
கொழும்பு, பெப் 14: நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட, அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 2,300 கொள்கலன்கள், டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன கூறுகையில் ” அரிசி, பருப்பு, சீனி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன. இது தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறோம் என்றார்.





