
எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
யார் என்ன சொன்னாலும், யார் என்ன நினைத்தாலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர்நோக்கவும், நடத்தவும் தயார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு தயாரில்லை. சிலர் போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களின் ஆணையை பாதுகாக்கும் நோக்கில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சிலர் பல்வேறு விடயங்களை நினைப்பார்கள், பேசுவார்கள். எனினும், நாம் எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்நோக்கத் தயார் என அவர் தெரிவித்தார்.





