இடைக்கால உத்தரவை மீறி 8வது நாளாக தொடரும் சுகாதார ஊழியர்களின் போராட்டம்

சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்படுகின்றது.

இதனால் அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் விநியோகம், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட சில சேவைகள் இன்றும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே சுகாதார ஊழியர்கள் 8 ஆவது நாளாக இன்றும் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் வேலைநிறுத்த நடவடிக்கையின் விளைவாக, பொது சுகாதார ஆய்வாளர்கள் வழங்கும் தடுப்பூசிகள் உட்பட பல்வேறு சுகாதார சேவைகள் இனி கிடைக்காது.

இதேவேளை பணிப்புறக்கணிப்பை உடனடியாக இடைநிறுத்துமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள பின்னணியில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நோயாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமையை பெரும்பாலான பகுதிகளில் அவதானிக்க கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply