திருமலை பெற்றோலிய தாங்கி தொடர்பில் ஆய்வு! – கம்மன்பில

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொள்ள திருகோணமலை பெற்றோலியம் டெர்மினல் லிமிடெட் தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும், ஆய்வின் பெறுபேறுகளின் அடிப்படையில் வணிகத் திட்டம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் அமைச்சர் கம்மன்பிலவின் கூற்றுப்படி, திருகோணமலை பெற்றோலியம் டெர்மினல் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை, மூன்று தடவைகள் கூடி இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளது.
இதேவேளை திருகோணமலை பெற்றோலியம் டெர்மினல் லிமிடெட், திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply