போராட்டங்களை முடக்க முயற்சித்தால் கடுமையாக எதிர்ப்போம்! அசேல சம்பத்

மின்சாரம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்டவற்றை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் உண்மையில் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருந்தால் அதற்கு மதிப்பளிக்கின்றோம்.

ஆனால், இந்த நடவடிக்கை அரச சேவையாளர்களின் போராட்டங்களை முடக்குவதற்கான முயற்சியாக இருந்தால், அதற்கு கடும் எதிர்ப்பினை வெளியிடுவதாக மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

அத்தோடு மின்சார சேவை தற்போது அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளமையினால், நாட்டின் தற்போது காணப்படுகின்ற மின் விநியோக நெருக்கடிக்கு காரணமானவர்களையும், அவர்களுடன் செயற்பட்ட மின்சார மாபியாக்களையும் இனங்காண்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- என்றார்.

நாட்டில் உள்ள ஒரே தேசிய வளம் மனித வளம் மட்டுமே! – ரணில்

Leave a Reply