<!–
டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டாய தனிமைப்படுத்தல் அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனையில் அறிகுறிகள் தென்படும் பயணிகள் மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் சர்வதேச பயணிகளுக்கு கட்டாயம் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதுடன், பயணிகள் தங்கள் உடல்நலன் குறித்து தாங்களாகவே 14 நாட்கள் கண்காணிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






