லிந்துலையில் தீ விபத்து – உடல் கருகி முதியவர் பலி!

தலவாக்கலை – லிந்துலை நகரில் இடம்பெற்ற தீ விபத்தில், முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினார்.

லெமலியர் தோட்டத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்தார்.

உணவகம் ஒன்றில் சமையலறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவேளை, திடீரென குறித்த நபரின் உடையில் தீ பரவியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply