முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

புத்தளம் – தில்லையடி பகுதியில் நேற்று இரவு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

புத்தளத்திலிருந்து ரத்மல்யா பகுதியை நோக்கி பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டிகள் இரண்டும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகிய நிலையில் காணப்படுவதுடன், முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளனர்.

முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவர் சிறிய காயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

லிந்துலையில் தீ விபத்து – உடல் கருகி முதியவர் பலி!

Leave a Reply