
நாட்டில் தற்போது தோற்றம் பெற்றுள்ள நெருக்கடியான சூழ்நிலைக்கு தீர்வு காண அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாரென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் நெருக்கடியான சூழ்நிலைக்கு தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும், இந்த நிலைமையை மாற்றுவது தொடர்பில் அனைவருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் முன்வர வேண்டும்.
இவ்வாறு நாம் கூறி,அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள முனைவதாக எண்ணிவிட வேண்டாம்.
ஏனென்றால் மக்களுக்காகவே அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!





