கிண்ணியாவில் புகுந்த காட்டு யானைகளால் கடை, வீடுகளுக்கு பலத்த சேதம்!

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்குளம், செம்பிமோட்டை கிராமங்களுக்குள் இரவு புகுந்த காட்டு யானைகள் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளன

சுமார் 6 – 7 யானைகள் ஊருக்குள் புகுந்து பலசரக்கு கடையினையும், இரண்டு வீடுகளையும் மற்றும் தென்னை மரங்கள் வாழை மரங்கள் முதலானவற்றை உடைத்தும், சேதப்படுத்தியும் உள்ளது

இதனால் கடைக்காரரும், தென்னைச் செய்கையாளர்களும் தாம் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்

அத்துடன் தென்னந் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் சுமார் 15க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

அத்துடன் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த நெல்லை சாப்பிட்டதுடன் வெளியில் வீசி சேதப்படுத்தியுள்ளது

தென்னை மரங்களை துவம்சம் செய்ததோடு வாழைக்குலைகளை சாப்பிட்டு வாழை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது

இரவில் தூங்க முடியாது பயமாக உள்ளதாகவும், யானைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் தெரிவிக்கின்றனர்

Leave a Reply