
ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முன்மொழிவுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் இந்த பிரேரணை தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அரசாங்கத்தின் இரண்டு பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
ஆகையினால் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மேலதிக வரி தொடர்பான விடயங்களை சிரேஷ்ட அமைச்சர்கள் எழுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அரசாங்கம் தனது வங்குரோத்தை மறைப்பதற்காக இவ்வாறான நிதிகளில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





