
நெல் சந்தைப்படுத்தல் சபையின் கிளைகளுக்கு நெல் இருப்புக்களை கொண்டு சென்று ஒப்படைத்தால் நெல்லுக்கு அதிக விலை வழங்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
அதாவது, உத்தரவாத விலையை விட 2 ரூபாயை நெல் சந்தைப்படுத்தல் சபை அதிகளவில் செலுத்தத் தயார் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் நீல் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இந்த வருடம் இயற்கை உரங்களை பயன்படுத்தியமையினால், விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளதாக பெரும்பான்மையான விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





