தொலைபேசியைப் பயன்படுத்த பெற்றோர் மறுத்ததால் தற்கொலை செய்த மாணவன்!

அனுராதபுரத்தைச் சேர்ந்த 12 வயது மாணவர் ஒருவர் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்த பெற்றோர் மறுத்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆன்லைன் கல்விக்காக பெற்றோர் கொடுத்த மொபைல் போனில் அடிக்கடி கேம் விளையாடி வந்ததாகவும், இந்த நிலையில் வீட்டார் தொலைபேசியை கொடுப்பதற்கு மறுத்துள்ளது.

இந் நிலையில் வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் மொபைல் கேமில் வரும் நிகழ்வுகளைப் போன்று கயிற்றை தயார் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் அனுராதபுரம் புனித ஜோசப் கல்லூரியில் தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவர் என தெரியவருகிறது.

மின்சார வேலியில் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு!

Leave a Reply