
யாழ்ப்பாணம், பெப் 14: அண்மையில் கடலில் மூழ்கி உயிரிழந்த வடமராட்சி வத்தராயன் கிராமத்தினை சேர்ந்த இரண்டு கடற்றொழிலாளர்களையும் தேடிக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியின் போது ஏற்பட்ட மொத்தச் செலவையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றுக் கொண்டார்.
அந்தவகையில், ரூ.1 லட்சம் நிதியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர் சங்கத்தினரிடம் கையளித்தார்.
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பதினோராம் கட்டை கடற்றொழில் சங்கத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பிரதேச கடல் தொழிலாளர் சங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நிதியை அமைச்சர் வழங்கினார்.





