தொல்லியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை

தொல்பொருள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வரைவு தயாரிக்கப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே பௌத்த ஆலோசனைக் குழுவிடமிருந்து கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தொல்லியல் கட்டளைச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரகாரம், தொல்பொருட்களைத் திருடும் நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை அல்லது 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் அநுரமனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply