
தற்சமயம் சந்தையில் சீமெந்திற்கான தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
துறை முகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கு தாமதக்கட்டணம் இன்றி விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் கோதுமைமா போன்ற பொருட்களுக்கான தட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும்.
பண்டிகைக் காலத்தில் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு சகல நடவடிக்கைகளுமள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





