பொய் கூறும் அமைச்சர் கம்மன்பில! அபயதிஸ்ஸ தேரர் சீற்றம்

இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள திருகோணமலை எண்ணெய் தாங்கிகள், இலங்கைக்கு திரும்ப பெற்றுக்கொண்டதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறுவது பொய் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

திருகோணலை நகர மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உண்மையில் பல காலமாக இலங்கையில் இருக்கும் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு எண்ணெய் தாங்கிகள் 50 ஆண்டுகளுக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளதே நடந்துள்ளது.

இலங்கையின் புவியியல் இருப்பிடம், இலங்கையின் இருப்பிடம் மற்றும் இங்கு கிடைக்கும் வளங்களின் அளவு ஆகியன காரணமாக உலகில் ஒவ்வொரு தருணத்திலும் நாம் பலியாக வேண்டியிருக்கும்.

திருகோணமலை துறைமுகம் தொடர்பான சம்பவம், இந்தியாவின் கைகளுக்கு சென்ற எண்ணெய் தாங்கிகள், இலங்கைக்கு திரும்ப பெறப்பட்டதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறியதுடன் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்தியாவுக்கு வழங்கிய எண்ணெய் தாங்கிகளை திரும்ப பெற்றால் தவறா?. பல ஆண்டுகளாக இந்தியா வைத்திருக்கும் எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு சென்றால் பெரிய பிரச்சினை ஏற்படும். இதன் காரணமாக எண்ணெய் தாங்கிகளை இலங்கைக்கு திரும்ப பெற்றதாக பொய் கூறினார்.

இந்தியா கடந்த காலத்தில் எமது நாடு குறித்த தேசப்பற்றில்லாத எமது வளங்களை காட்டிக்கொடுக்கும் தலைவர்களை சம்பந்தப்படுத்திக்கொண்டு எண்ணெய் தாங்கிகளை கைப்பற்றி இருந்தது.

இந்த நிலையில் தற்போது 50 ஆண்டுகளுக்கு திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியா கைப்பற்றிக்கொண்டுள்ளது.

மெதகொட அபயதிஸ்ஸ தேரர், இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பங்களிப்பு செய்த முக்கிய பௌத்த பிக்குகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்த்ககது.

Leave a Reply