
நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலங்களை அதிகரிப்பது தொடர்பில், வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்தாமையை கண்டித்து கையெழுத்து வேட்டையை முன்னெடுக்கவுள்ளதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் கருத்து தெரிவிக்கையில்.
நுவரெலிய மாவட்டத்தில் 5 பிரதேச செயலகங்களை நிறுவுவதற்கு 2016ஆம் ஆண்டு பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2018 ஆம் ஆண்டு அமைச்சரை அங்கீகாரம் கிடைத்தது. 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி இது தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கு மாறாக 2 உப செயலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் காலி மாவட்டத்துக்கு புதிய பிரதேச செயலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆகவே சமூக விஞ்ஞான ஆய்வு மையம் குறித்த விடயத்துக்கு ஆதரவு வழங்குவதற்கு 4 காரணங்கள் உள்ளன.
ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக குரல் கொடுக்க வேண்டியது சமூக பொது அமைப்பின் கடமை. பெருந்தோட்ட மக்கள் இன்னமும் அரசின் இருப்புக்குள் வரவில்லை. இவ்வாறான காரணங்களால் நாம் பிரதேச செயலகங்களை அதிகரிக்க வேண்டும் என்ற விடயத்துக்கு குரல் கொடுக்க தீர்மானித்துள்ளோம்.
வடக்கு கிழக்கு மக்கள் இணைந்து மலையக மக்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். காலி மாவட்டத்தில் செயன்முறைப்படுத்தப்பட்ட விடயம் மலையகத்தில் செயன்முறைப்படுத்தப்படவில்லை. இது ஒரு இனவாத செயலுக்கு ஒப்பானது என்றார்.





