ஊடகவியலாளர் சமரவிக்கிரமவின் வீட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம்

இன்று அதிகாலை மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு, கல்லெறிதல் ஆகியவற்றால் தாக்குதல் நடத்தப்பட்ட பிரபல ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்கிரமவின் வீட்டுக்கு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், காவிந்த ஜயவர்தன, கயந்த கருணாதிலக மற்றும் ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளின் ஆகியோரே இன்று அதிகாலை தாக்குதலுக்கு உள்ளாகிய, பிரபல சிங்கள ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவின் பிலியந்தலை வீட்டுக்குச் சென்று சம்பவம் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.

Leave a Reply