
உக்ரைன்- ரஷ்யாவுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றமையினால் பல நாடுகள் தங்களது நாட்டு பிரஜைகளை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கட்டளையிடுகின்றன.
இந்நிலையில் உக்ரைனிலுள்ள இலங்கையர்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளதாவது, உக்ரைனில் 42 இலங்கையர்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் 7 பேர் மாணவர்கள் ஆவர்.
மேலும் இலங்கையர்கள் தொடர்பில் மிகவும் அவதானத்துடனே செயற்பட்டு வருவதுடன் இவர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
இருப்பினும், உக்ரைனில் அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தில், அங்குள்ள இலங்கையர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.





