சமூக வலைத்தளம் ஊடாக போதைப்பொருள் விற்பனை: பொலிஸ் தகவல்

கொழும்பு, பெப் 14: பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் மூலம் போதைப்பொருள் விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக பலரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்வத்த கூறுகையில் ” அநுராதபுரம், தஹையாகம ஹோட்டல் ஒன்றில் நடந்த விருந்தொன்றில் ஐஸ் போதைப்பொருள், கஞ்சா உள்ளிட்டவற்றுடன் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கண்டியில் இடம்பெற்ற விருந்தொன்றில் போதைப் பொருள்களுடன் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போதை பொருள் விருந்துகள், சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. விருந்துகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வரும் அழைப்புகள் தொடர்பாக மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்

Leave a Reply