யாழ்ப்பாணம் வருகிறார் மோடி

கொழும்பு, பெப் 14: இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்குள் தனது முதலாவது பயணமாக யாழ். மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளார் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

5 ஆவது பிம்ஸ்டெக் பல்துறை, தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி உச்சிமாநாடு மார்ச் 30 இல் கொழும்பில் நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி முதலில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு இந்திய அனுசரணையுடன் கட்டப்பட்டுள்ள, கலாசார நிலையத்தை திறந்து வைத்ததன் பிறகு அங்கிருந்து விமானம் மூலம் கொழும்புக்கு செல்லவுள்ளார் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply