300,000 மெற்றிக் தொன் நெல்லை அரசே கொள்வனவு செய்துள்ளது

கொழும்பு, பெப் 14: 2021,22 பெரும்போகத்தில் விளைந்த 300,000 மெற்றிக் தொன் நெல்லைநெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக அரசே கொள்வனவு செய்துள்ளது என்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில், இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன மேலும் கூறுகையில் ” பெரும்போகத்தில் விளைந்த 300,000 மெற்றிக் தொன் நெல்லை இதுவரை கொள்வனவு செய்துள்ளோம். வரும் இரண்டு வாரங்களில் மேலும், 35,000 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்யவுள்ளோம்.

விவசாயிகளிடமிருந்து நாடு அரிசி கிலோ ரூ.90 உத்தரவாத விலையிலும், சம்பா நெல் கிலோ ரூ. 92-க்கும், கீரி சம்பா நெல் ஒரு கிலோ ரூ. 95 க்கும் கொள்வனவு செய்துள்ளோம். மேலும், ஒரு கிலோ நெல்லுக்கு ரூ. 2 போக்குவரத்துக் கட்டணமாக செலுத்தி வருகிறோம் என்றார் அவர்.

Leave a Reply