நாட்டிற்கான கல்வி கிராமத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கான கல்வியை வீட்டிலிருந்து கற்றுக்கொடுக்கக் வேண்டும். இலங்கையில் முதன்முறையாக, 2022 வரவு செலவுத் திட்டத்தில் ஒரு கிராமத்திற்கு வரவு செலவுத் திட்டம் வழங்கப்பட்டது.
இந்த வரவு செலவுத் திட்டம் ஒவ்வொரு கிராமத்திற்கும் புத்துயிர் அளிப்பதற்கும் ஒவ்வொரு குடிமகனை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து குடிமக்களும் உற்பத்திக்கு பங்களிப்பதை அரசாங்கம் சாத்தியமாக்கியுள்ளது. ஆகவே கல்வியும் கிராம மட்டத்திலிருந்து புத்துயிர் பெற வேண்டும் என்றார்.
கூட்டு ஆவணத்துக்கான பதிலை மோடி அரசு செயலில் காட்டும்! – சம்பந்தன் நம்பிக்கை





