எரிபொருள் விலையை நிர்ணயம் செய்ய விலைச் சூத்திரம் அறிமுகம்: எரிசக்தி அமைச்சர் தகவல்

கொழும்பு, பெப் 14: நாட்டில் எரிபொருள் விலையை நிர்ணயம் செய்வதற்கான விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் ” உலகச் சந்தையில் உள்ள எரிபொருளின் விலையை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் எரிபொருளின் விலையை தீர்மானிக்கும் வகையிலான விலைச் சூத்திரத்தை தயாரித்துள்ளோம். இது அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த விலைச் சூத்திரம் அங்கீகரிக்கப்பட்டால், உலகச் சந்தையில் எரிபொருளின் விலையை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் எரிபொருள் விலையை தீர்மானிக்க முடியும். இந்த முறை மிகவும் வெளிப்படையானதாக இருக்கும்.

மேலும், உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை காரணம் காட்டி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது. ஆனால், இது தொடர்பாக இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றார் அவர்.

Leave a Reply