
கிளிநொச்சி கண்டாவளை பகுதிக்கான சுகாதார வைத்திய அதிகாரி ( M.O.H) தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார பணிமனை தெரிவித்துள்ளது.
நீண்டகாலமாக M.O.H இல்லாத நிலையில் , உப சுகாதார வைத்திய அதிகாரியாக (A.M.O.H ) பிரியந்தினி கமலசிங்கம் கடமையாற்றி வந்தார்.
தற்போது சுகாதார நியமனக் கோவை மற்றும், வெற்றிட முன்மொழிவுக்கு அமைவாக புதிதாக M.O.H ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
போரால் பாதிக்கப்பட்ட குறித்த பகுதியில் சுகாதார சார்ந்த பணிகள் அதிகம் தேவைப்படும் நிலையில்,சமூக அமைப்புகள் மற்றும் ஆலய நிர்வாகங்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது M.O.H ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை முன்பு பணியாற்றிய உப சுகாதார வைத்திய அதிகாரி அதே பணிமனையில் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





