
கச்ச தீவுப் பெருவிழாவில் இந்திய பக்தர்களை அழைப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
கச்ச தீவு பெருவிழா தொடர்பில் சமூகம் மீடியா வினவிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது வரை இடம்பெற்ற கூட்டங்களின் அடிப்படையில், இலங்கை பக்தர்கள் மட்டுமே இம்முறை கச்ச தீவு புனித அந்தோனியார் பெருநாளில் கலந்து கொள்ள முடியும்
இந்திய பக்தர்களின் வருகை தொடர்பில் அடுத்த கூட்டங்களில் முடிவுகள் எடுக்கப்படலாம்.
எதிர்வரும் மார்ச் மாதம் 11,12 ஆம் திகதிகளில் திருவிழா நடைபெறும்.இதில் 500 பக்தர்கள் மட்டுமே இம்முறை கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.அத்துடன் கொரோனா தடுப்பூசியின் 3 டோஸ்களும் செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றார்.





