புத்தளம் – கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம், இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
நுரைச்சோலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வான் ஒன்று வீதியின் வலதுபுறம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
அதன் பின்னர் சிலாபத்தில் இருந்து ஆனைவிழுந்தான் நோக்கி பயணித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில், வீதி அபிவிருத்தி திணைக்கள ஊழியர்களான நல்லதரன்கடுவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய எஸ்.ஏ.ஜூட் மற்றும் 51 வயதுடைய கே. பிரிம்ஜயந்த ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலையகத்திற்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் அத்தனையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம்! ரமேஷ்வரன் எம்பி





