வெளிநாட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுநர் கைது

கொழும்பு, பெப் 14: அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 40 வயது பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற ஆட்டோ சாரதியை, எல்ல பொலிசார் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் கூறுகையில் “எல்ல நகரிலிருந்து கரந்தகொல்லை உல்லாச விடுதிக்கு செல்வதற்கு பெண் ஒருவர், ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, இந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த ஆட்டோ ஓட்டுநர் முயன்றுள்ளார்.

ஆட்டோ சாரதியின் பிடியிலிருந்த தப்பி ஓடிய பெண் எல்ல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து, விரைந்து செயற்பட்ட பொலிசார் ஆட்டோ சாரதியை கைது செய்தனர்.

இது தொடர்பாக எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபேந்திர வாசனா அபேகுணவர்தன கூறுகையில் “கைது செய்யப்பட்ட ஆட்டோ சாரதி விசாரணையின் பின்னர் பண்டாரவளை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply