இலங்கைக்கு மேலும் பல பில்லியன்களை வழங்கவுள்ள இந்தியா! பட்டியலிட்டு புகழ்ந்தார் ஜீ.எல்.பீரிஸ்

இலங்கைக்கு எப்போதும் இந்திய கைகொடுத்து வருவதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சனைக்கு இந்தியா தொடர்ச்சியாக உதவி வருகிறது.

இந்தியாவில் இருந்து எமக்கு 2.4 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் கிடைக்க உள்ளன.

ஏதாவது ஒரு வகையில் இந்தியா நமக்கு உதவி வழங்கியது. கொரோனா காலத்தில் முதலில் தடுப்பூசி வழங்கியது.

அத்துடன் எக்ஸ்பிரஸ் கப்பல் மூழ்கபட்ட போது உடனடியாக இந்தியா தீயணைப்பிற்கு உதவியது.

இந்தியா மட்டும் அல்ல சீனா, பங்களாதேஷ் நாடுகள் உதவி கிடைக்கப்பெற்றது. இந்தியாவின் பொருளாதாரம் இலங்கையைவிட பரந்தரவில் காணப்படுகிறது.

எனினும், நம் நாட்டிலும் பொருளாதார வளர்ச்சி காணப்படுகிறது. குறிப்பாக ஓளடத உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகிறது.

சுற்றுலா பயணிகளின் வருகை இந்தியாவிலிருந்தே அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவுடனான நட்பு சீராக காணப்படுகிறது.

நிதி அமைச்சர் இந்தியா சென்று பேச்சுவார்த்தை நடத்தியமையால்தான் இன்று நமக்கு 2.4 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் கிடைக்க உள்ளன என்றார்.

மலையகத்திற்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் அத்தனையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம்! ரமேஷ்வரன் எம்பி

Leave a Reply