திருமலையில் குடிநீருக்காக தோண்டப்பட்ட நிலத்தில் துப்பாக்கி மீட்பு!

திருகோணமலை – பூம்பூகார் – பாலையூற்று பகுதியில் எஸ்.எம்.ஜீ ரக துப்பாக்கி ஒன்றும் மூன்று மெகசின்களும் மீட்கப்பட்டுள்ளது.

அதன்படி, விசேட அதிரடிப்படையின் உதவியுடன் திருகோணமலை பொலிஸார் இன்று திங்கட்கிழமை மாலை மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த நபர் குடிநீர் இணைப்பு பெறுவதற்காக நிலைத்திணை தோண்டிக் கொண்டிருந்தபோது துப்பாக்கி மற்றும் மெகசீன்கள் இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து குறித்த துப்பாக்கி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது .

மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply