
சிவகங்கை பகுதியில் இன்று அதிகாலை, வானில் எரிந்த நிலையில் மர்ம பொருள் ஒன்று எரிந்துகொண்டு சென்றுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பெரியகோட்டை கிராமத்தி இன்று வானத்தில் மர்ம பொருள் எரிந்துகொண்டு சென்றுள்ளதை அப்பகுதி இளைஞர்கள் செல்போனில் படம்பிடித்துள்ளனர்.
இச் சம்பவம், இன்று திங்கட்கிழமை அதிகாலை 6.05 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
சுமார் 90 வினாடிகள் நீடித்ததாக கூறப்படும் இது பறக்கும் தட்டா, எரிநட்சத்திரமா அல்லது இன்று இந்திய அரசால் ஏவப்பட்ட ராக்கெட்டா என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
எரி நட்சத்திரம் மேலிருந்து கீழே வரும் என்பதும், ராக்கெட் கீழிருந்து மேலே செல்லும் என்பதும் அனைவரும் அறிந்ததே.
ஆனால் இன்று சென்ற பொருள் சமமாக ( கிடைமட்டமாக) சென்றதால் இந்த வீடியோ அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மர்ம பொருள் வானில் சென்ற காட்சி அப்பகுதி இளைஞரால் படம்பிடித்து சமுகவலைதளங்களில் பகிரப்பட்ட காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.





