ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பதினேழு தொழில் சங்கங்கள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான சுகாதார ஊழியர்கள், இன்று பிற்பகல் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று எட்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இன்று காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி செயலக கட்டிடத்தை நோக்கி சென்றது.

இதனால் குறித்த பகுதி மற்றும் இணைக்கப்பட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவையடுத்து அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் மாத்திரம் பணிப்புறக்கணிப்பில் இருந்து விலக தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், எஞ்சிய 17 தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்வது குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply