நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டால் குழப்பம் ஏற்படலாம்; எச்சரிக்கை விடுத்த காணி அமைச்சர்

நீதிமன்ற உத்தரவை மீறி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டே செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நியாயமான காரணங்களை கருத்திற் கொண்டு நீதிமன்றம் தடை உத்தரவுகளை பிறப்பித்து வருவதாக தெரிவித்த அமைச்சர், நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்காவிட்டால் நாட்டில் குழப்பம் ஏற்படலாம் எனவும் தெரிவித்தார்.

இலங்கைக்கு மேலும் பல பில்லியன்களை வழங்கவுள்ள இந்தியா! பட்டியலிட்டு புகழ்ந்தார் ஜீ.எல்.பீரிஸ்

Leave a Reply