தொழிற்சங்க நடவடிக்கைகளை நசுக்க முயற்சித்தால் இதுதான் எமது முடிவு! ரவி குமுதேஷ்

அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கைகளை நசுக்க முயற்சித்தால், கூட்டமைப்புக்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்க உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் வேலைநிறுத்தம் குறித்து முடிவெடுப்பதற்காக காலை 9 மணிக்கு சிறப்பு கலந்துரையாடல் நடத்தப்படும் என்றார்.

மேலும், சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் பொது மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

அத்துடன், தொழிற்சங்க நடவடிக்கைக்கான உறுப்பினர்களிடம் அனுமதி பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் தெரியவருகையில்,

தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படுமாயின் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தத்தை கைவிடுவதற்கு தயார் என சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தங்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று தமக்கான தீர்வு வழங்கப்படும் என நம்புவதாக தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கைகளை நசுக்க முயற்சித்தால், கூட்டமைப்புக்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்க உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் ஏழு கோரிக்கைகள் தொடர்பில் இடைக்கால உடன்பாடு காணப்பட்ட போதிலும், மேலதிக நேர மற்றும் நடமாடும் கொடுப்பனவுகள் தொடர்பான கோரிக்கைகளை அதிகாரிகளால் நிறைவேற்ற முடியாது என நேற்றைய கலந்துரையாடலின் போது தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பெப்ரவரி 8 ஆம் திகதி ஒப்புக் கொள்ளப்பட்டதாக ரவி குமுதேஷ் கூறினார்.

நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டால் மற்றும் அதிகாரிகள் எழுத்துமூலமான உறுதிமொழியை வழங்கினால், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி வேலைநிறுத்தத்தை கைவிடத் தயார் என மேலும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply