சிறுவனின் வாயை துளைத்த துப்பாக்கி குண்டு

கொஸ்லந்த – கெலிபானவெல பிரதேசத்தில் 12 வயது சிறுவன் வாயில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இதையடுத்து, குறித்த சிறுவன் வாயில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply